ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை தேர்த் திருவிழாவின் 10ம் நாளான இன்று (07.05.2024) மாலை, நம்பெருமாள், சப்தாவரணம் புறப்பாட்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு, கொடி இறக்கம் நடந்தது. இன்று சித்திரை விதியில் துக்க நிகழ்வு என்பதால் பெருமாள் வீதியுலா வராமல், கோயிலுக்குள் மட்டும் புறப்பாடாகினார்.